August 31, 2016
ரூ.69 கோடியை திருப்பிச் செலுத்த தயார்" - எஸ்.ஆர்.எம் நிறுவனம்
மருத்துவ சீட் மோசடி விவகாரத்தில், 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எஸ்.ஆர்.எம் நிறுவனம் முன்வந்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்துத் தரக் கோரியது உள்ளிட்ட 2 வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
இதனிடையே, எஸ்.ஆர்.எம் பல்கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் தரப்பில், தங்களையும் மனுதாரராக இணைத்து கொள்ளுமாறு சத்தியநாராயணா பச்சமுத்து மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாவும், முறைகேடு செய்ததாக கூறப்படும் 69 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் என்றும் தெரிவித்த பச்சமுத்துவின் மகன்கள் தரப்பு, பச்சமுத்துவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், இந்த வழக்கில் பச்சமுத்துவுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் காவல்துறை இதுதொடர்பாக பதிலளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ரூ.69 கோடியை திருப்பிச் செலுத்த தயார்" - எஸ்.ஆர்.எம் நிறுவனம்
Reviewed by மறத்தமிழன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.