Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

தம்பியின் மனைவி மீது அண்ணன் ஆசை!! 60 அடி கோபுரத்தில் நடந்த விபரீதம்…??


காரைக்குடியில் தன் ஒருதலை காதலை சேர்த்து வைக்ககோரி கையடக்கத் தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் இரு மகன்களின் ஒருவரான ஜெயச்சந்திரன்  ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், ஜெயச்சந்திரனின் குடிப்பழக்கத்தால் கணவனை  பிரிந்து சென்று விட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே ஜெயச்சந்திரனின் அண்ணன் முருகனுக்கு தம்பியின் மனைவி மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டது.

எனவே, தம்பி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, 60 அடி உயர கோபுரத்தில் முருகன் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

உடனடியாக முருகனின் குடும்பத்தார் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க,சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கீழேயிறங்க சம்மதித்த முருகன், செங்கல்கற்களை தலையில் அடித்துக் கொண்டு புலம்பியுள்ளார். தரையை நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த முருகனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக முருகனை போலிஸார் மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

செல் போன் கோபுரத்தில் ஏறிய முருகன் மது போதையில் இருந்ததுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.