August 25, 2016
பெண் கொலை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கம்பியால் அடித்து கொலை செய்த கணவர் உள்ளிட்ட 5 பேருக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தனது மனைவி ஜெயசீலி நடத்தையில் சந்தேகமடைந்து, கடந்த 2011ம் ஆண்டு தனது நண்பர்கள் வெற்றிவேல், சோமசுந்தரம், தங்கதுரை, தேவராஜ் ஆகியோருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்.
இது குறித்த வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கயல்விழி, கொலை குற்றத்திற்காக பழனி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், சுமார் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
பெண் கொலை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.