Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

ரயில் கொள்ளை சம்பவத்தில் 5 வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்!



ரயில் கொள்ளை சம்பவத்தில் 5 வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்!
ரயில் கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8ம் தேதி வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட ஐஓபி வங்கிக்கு சொந்தமான 5 கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 5 குழுக்களாக பிரிந்த சிபிசிஐடி போலீசார், சேலம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் இந்த  கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கடந்த 6 மாதங்களாக ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு செல்வதை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை பற்றிய தகவல்களை சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.