Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 15, 2016

ரயிலில் 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!



ரயில் கொள்ளை நடந்தது சென்னையில்தான் என்பதற்கு முக்கிய ஆதாரமாகச் சேத்துப்பட்டு பணிமனை அருகே ரயில் கூரையின் ஒருபகுதியான கண்ணாடி இழைப் படலத்தைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிக்காகக் கொண்டுவரப்பட்ட பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளைபோனது. ரயில் பெட்டியின் மேற்கூரையைத் துளையிட்டு எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர், சிபிசிஐடி பிரிவினர் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை எங்கு நடைபெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் நிலவி வந்தது. சேலத்தில் இருந்து சென்னை வரை அனைத்து நிலையங்களிலும் விசாரித்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு பணிமனையில் ரயில்வே ஐ.ஜி பாரி தலைமையில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.
அப்போது ரயில்பெட்டியின் கூரையில் வெட்டப்பட்ட கிளாஸ்வுல் எனப்படும் பஞ்சு போன்ற அட்டை பணிமனையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. இது ரயில் பெட்டியின் கூரையை வெட்டிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது சேத்துப்பட்டில்தான் என்பதற்கு உறுதியான சான்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஒரு தடயம் சிக்கியுள்ளது விசாரணையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லவும் கொள்ளையர்களை அடையாளம் காணவும் விசாரணை வளையத்தைச் சென்னைக்குள் சுருக்கிக்கொள்ளவும் உதவும் எனக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.