August 22, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 50 இஸ்லாமியர்கள் பலி
துருக்கியில் நேற்று அதிகாலை தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதில் 50 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர்.
துருக்கியில் சிரியா எல்லையை ஒட்டிய காஸியன்டெப் பகுதியில் குர்து இன மக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணி) திருமண விழா நடைபெற்றது. அந்தப் பகுதி வழக்கப்படி மணமக்கள் மற்றும் உறவினர்கள் தெருவில் நடனமாடி கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 50 பேர் உயிரிழந்தனர். மணமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
துருக்கியில் சிரியா எல்லையை ஒட்டிய பகுதிகளில் 1.4 கோடி குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இது துருக்கி மக்கள் தொகையில் 18 சதவீதம் ஆகும். அப்பகுதியின் பிரதான கட்சியாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி செயல்படுகிறது. ஆனால் அந்தக் கட்சியை துருக்கி அரசு தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்துள்ளது.
சிரியா, இராக்கில் வாழும் குர்து மொழி பேசும் முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியில் வாழும் குர்து மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 50 இஸ்லாமியர்கள் பலி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.