August 21, 2016
கேரளாவில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி பலி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புல்லுவிளையை சேர்ந்தவர் சிலுவம்மா. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட நாய்கள் சிலுவம்மாவை கடித்து குதறின.
இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் சிலுவம்மாவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த டெய்சி என்ற பெண்ணையும் 50க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறியதால், தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.