August 11, 2016
பெற்ற தாயே 5 வயது குழந்தையை கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 5 வயது குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள புஷ்பத்தூரை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி மாரிக்கண்ணு. இவருக்கு நெய்க்காரபட்டியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று நேற்று காலை தாய்வீட்டிற்கு மாரிக்கண்ணு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அவரது பெற்றோர் புஷ்பத்தூர் வந்தபோது, பேரன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தையின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் மாரிக்கண்ணு மீது சந்தேகமடைந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறையினர், மாரிக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தங்களது கள்ளத்தொடர்புக்கு மகன் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொன்றுவிட்டதாக மாரிக்கண்ணு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணுவை கைது செய்த போலீசார், தலைமறைவான அங்கமுத்துவை தேடி வருகின்றனர். இதனிடையே, மாரிக்கண்ணுவுக்கு பிறந்த 3-வது குழந்தையும் திடீரென இறந்ததாகவும், அக்குழந்தையும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
பெற்ற தாயே 5 வயது குழந்தையை கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.