Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

இந்த 5 காரணங்களுக்காக இந்திய இளைஞர்கள் பெருமை கொள்ளலாம்!


உலகமே இந்தியாவிடம் பெரிதாக வியக்கும் விஷயம் இந்தியாவின் வளம், அதற்கு அடுத்தபடியாக அதிக இளைஞர்களைக்  கொண்ட நாடு என்ற விஷயத்தை தான். இந்திய இளைஞர்கள் பற்றிய சமீபத்திய ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இந்திய இளைஞர்கள் வேலை, கல்வி, அறிவு, திறமை, ஆர்வம் என பல்வேறு காரணிகளிலும் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள். பின்வரும்  ஐந்து  காரணங்களுக்காக‌ இந்திய இளைஞர்கள் கட்டாயம் பெருமிதம் கொள்ளலாம்.


1. உலகிலேயே அதிக நேரம் பணிபுரிபவர்கள்!

உலகிலேயே ஒரு வாரத்தில் அதிக நேரம் பணிபுரியும் இளைஞர்கள் இந்திய இளைஞர்கள் தான் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 52 மணிநேரங்கள் பணி புரிகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ, சீனா மற்றும் சிங்கப்பூர் இளைஞர்கள் உள்ளனர். இந்த விஷயத்தில் மற்ற நாடுகளின் இளைஞர்கள் பின் தங்குகிறார்கள்.ஆனால் செயல்திறனில் இந்திய இளைஞர்களே முதலிடத்தில் உள்ளனர்.

2. வேலைக்காரர்கள் அல்ல!

இவர்கள் கடைசி வரை வேலை பார்த்துக் கொண்டே இருந்து ஓய்வு பெறுபவர்கள் அல்ல. உலக அளவில் எடுக்கப்பட்ட இளைஞர்களுக்கான சர்வேயில் 100ல் 14 இந்திய இளைஞர்கள் மட்டுமே கடைசி வரை பணியில் இருக்க விரும்புவதாகவும். ஒரே பணியில் இருக்க விரும்பாதவர்கள், சொந்தமாகத் தொழிலை வளர்க்கும் நபர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் அதிகபட்சமாக 100ல் 37 பேர் கடைசி வரை வேலை பார்க்கவே விரும்புவதாகக் கூறியுள்ளனர்.



3.நிறுவனங்களை நம்புபவர்கள்!

உலக அளவில் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை 90 சதகித இந்திய இளைஞர்கள் நம்புகிறார்கள். நிறுவனங்களும் இவர்களை நம்பி பெரிய பொறுப்புகளைத் தருகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இந்த சதவிகிதம் 66% - 78 % என்ற அளவிலேயே உள்ளது. இந்திய இளைஞர்கள் தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து கடந்த கால முடிவுகளிலிருந்து கிடைக்கும் அனுபவத்தைக்  கற்றுக் கொண்டு திறம்பட பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள்

4. பெண்கள் மேம்பாடு!

உலகில் உள்ள 30 வயதுக்குட்பட்ட பெண்களில் வேலையில் பணி உயர்வையும், ஆண்களுக்கு நிகராக பணிபுரிவதையும் விரும்பும் பெண்களில் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் உள்ளதாகவும், மற்ற நாடுகளில் உள்ள பெண்களில் சராசரியாக  49 சதவிகித அளவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதேசமயம் இந்தியாவில் 21 சதவிகித பெண்கள், தாங்கள் பணிபுரியும்  நிறுவனங்கள் ஆண்களுக்கு ஆதரவாக  இருப்பதாகத்  தெரிவிக்கிறார்கள். ஆனால் இது சர்வதேச சராசரியை விட குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.



5. மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள்! 

உலகில் மற்ற நாடுகளின் இளைஞர்களிடம் இல்லாத தனித்துவமான பண்பாக இந்திய இளைஞர்களிடம்  பார்க்கப்படுவது அவர்களின் கலாச்சார மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் குணத்தைத்தான். இந்திய இளைஞர்கள் மற்ற நாடுகளின் உணவு, கலாச்சாரம், வேலைமுறை அனைத்தையும் மிக வேகமாகக்  கற்றுக் கொள்கிறார்கள்.இந்த அளவிற்கு, கலாச்சார ரீதியாக மேம்பட்ட நாடுகளாகக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் இளைஞர்களால் கூட எளிதாக மாற்றத்துக்கு உட்பட முடிவதில்லை என்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் இந்திய இளைஞர்களின் வெற்றி சதவிகிதம் 75% . இந்த விஷயத்தில்  உலக சராசரி குறைவு (62%) தான்.

இந்தியாவின் இளைஞர்கள் உலக அளவில் பெரிதாக மதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. வாட்ஸ் அப் நீரஜ் அரோரா முதல் விராட் கோலி, சாய்னா வரை...ஏன் இந்தக்  கட்டுரையைப் படித்துக்  கொண்டிருக்கும் நீங்களும் இந்த 5 காரணங்களுக்காகப் பெருமை கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.