Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

சென்னையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட இளைஞர் மீட்பு: 4 பேர் கைது




சென்னையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட இளைஞர் மீட்பு: 4 பேர் கைது
சென்னை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரை கடத்தி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பிரேம்குமார் என்பவர் நாவலூரில் பணியை முடித்து வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத 4 நபர்களால் கடத்தப்பட்டார். இதனை அடுத்து கடத்தல் நபர்கள், பிரேம்குமாரின் தந்தையை தொடர்பு கொண்டு ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.


இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தீவிர விசாரணை நடத்திய கோவளம் போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பார்த்திபன், ஜெயசீலன், பிரவீன்பாலாஜி, விவேக்ராஜ் ஆகியோரை பிடித்தனர். அவர்கள் வசம் இருந்த மென்பொருள் ஊழியர் பிரேம்குமார் மீட்கப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.