August 23, 2016
ரூ.49க்கு லேண்ட்லைன் தொலைபேசி சேவை. பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக புதுப்புது சலுகைகளை அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது வெறும் 49 ரூபாய்க்குத் லேண்ட்லைன் தொலைபேசி சேவையைத் தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பலவித காரணங்களால் தங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கும் விதமாக பல அதிரடி அறிவிப்புக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தது. மேலும், தரைவழித் தொலைபேசி சேவையில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை பேசிக்கொள்ள இலவசம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமேலாளர் கலாவதி, ''சில குறைபாடுகள் காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, மாத கட்டணம் 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தரைவழித் தொலைபேசி சேவையில், தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவைக்கும் பொருந்தும்.
பி.எஸ்.என்.எல் சேவையை அதிகப்படுத்தும் வகையில், விரைவில் 300 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட உள்ளது" என்றார்.
ரூ.49க்கு லேண்ட்லைன் தொலைபேசி சேவை. பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.