Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

திருவனந்தபுரம் அருகே தோழியை ஆபாச படம் எடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி: பெண் உள்பட 3 பேர் கைது



திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக பாலராமபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டிற்கு இரவு நேரங்களில் ஆண்கள் சென்று வருவது தெரிய வந்தது.
உடனே போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்தது தெரிய வந்தது.
அந்த வீட்டில் இருந்த பாலராமபுரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஜவகர் (வயது 28), லைஜு (31), விபசார அழகி அசுவதி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அந்த வீட்டில் அழகிகளை வரவழைத்து விபசாரம் செய்துள்ளனர்.
அந்த விபசார கும்பலிடம் இருந்து அதிநவீன செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில், பல பெண்களின் ஆபாச படங்கள் பதிவாகி இருந்தது.இதுபற்றி அந்த கும்பலிடம் போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விபசார அழகி அசுவதி, பாலராமபுரத்தில் உள்ள தனது வீடு அருகே வசித்த தோழி ஒருவரை அவர் குளிக்கும்போது ரகசியமாக தனது செல்போனில் நிர்வாண படம் எடுத்துள்ளார். பிறகு அதை காட்டி அந்த பெண்ணை விபசாரத்தில் தள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுபற்றி பாலராமபுரம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அசுவதியை தேடி வந்தனர்.
இதனால் அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது போலீசார் நடத்திய விபசார வேட்டையின் போது சிக்கிக் கொண்டார். இந்த கும்பல் வேறு ஏதும் பெண்களை இதுபோல மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்களா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.