
திருவள்ளூ
ர் அருகே பிறந்து 3 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த அமிர்தமங்களம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் - அம்பிகா தம்பதியருக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ஜோதிலட்சுமி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் தாமோதரன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையை கொன்று விடும்படி தனது மனைவியிடம் அவர் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இதற்கு மனைவி அம்பிகா மருத்து வந்த நிலையில், நேற்று அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 3வது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாமோதரன் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவரப்பேட்டை போலீசார், தப்பியோடிய தாமோதரனை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.