Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

நார்வேயில் ஒரே ஒரு மின்னலால் உயிரிழந்த 323 காட்டுமான்கள்.



நார்வேயில் ஒரே ஒரு மின்னலால் உயிரிழந்த 323 காட்டுமான்கள்.
நார்வே நாட்டில் உள்ள Hardangervidda mountain என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டுமான்கள் துள்ளி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மின்னல் காரணமாக மான்கள் கூட்டத்தில் இருந்த 323 காட்டுமான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இவற்றில் 70 குட்டி காட்டு மான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Hardangervidda mountain பகுதியில் அடிக்கடி திடீர் திடீரென மின்னல் ஏற்பட்ட போதிலும் அதிகளவிலான உயிரிழப்பு நடந்தது இப்போதுதான் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறியபோது, 'இதுபோன்று மிகப்பெரிய எண்ணிக்கையில் காட்டுமான்கள் ஒரே மின்னலில் இறந்து போனதை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. இதுவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று தெரிவித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.