Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

3000 மதுபானங்கள் படைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்!



தேனி அருகே சோனைமுத்து கருப்பசாமிக்கு 3000 மதுபானங்கள் படைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்.
தமிழகத்தில் சனீஸ்வரபகவானுக்கு திருநல்லாறு மற்றும் குச்சனூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கோவில்கள் உள்ளன. இதில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் உள்ளதால் தமிழகத்தில் சுயம்வு வடிவில் உள்ள ஓரே சனீஸ்வர பகவான் கோவில் என்ற பெருமையை சோனை முத்து கருப்பசுவாமி கோவில் பெற்றுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில்  ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை சோனை முத்து கருப்பசாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைத்தும் மற்றும் மதுபானங்கள் படைத்தும் வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டிருந்த பக்தர்கள் மதுபானங்களை கொண்டு வந்து சாமிக்கு படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.