August 28, 2016
சென்னையில் போலீசாருக்கு பயந்து கூவத்தில் குதித்த வாலிபர் 2 நாள் கழித்து சடலமாக மீட்பு
சென்னையில் போலீசாருக்கு பயந்து கூவத்தில் குதித்த வாலிபர் 2 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் அருண். அவரின் சகோதரர் அற்புதராஜ் சம்பந்தப்பட்ட கொள்ளை வழக்கிற்காக அருணை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேடியுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை அருகே வந்துக்கொண்டிருந்த அருணை போலீசார் துரத்தியதாக கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிக்க முடிவு செய்த அருண் கூவத்தில் குதித்துள்ளார். இதனைக்கண்ட போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து கூவத்திலிருந்து அருணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னையில் போலீசாருக்கு பயந்து கூவத்தில் குதித்த வாலிபர் 2 நாள் கழித்து சடலமாக மீட்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.