Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 22, 2016

ஐ.டி. பெண் ஊழியர் கொலை 2 பேருக்கு மரண தண்டனை


டெல்லியில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சிக்‌ஷா (28), வேலை முடிந்து வசந்த  விகார் பகுதியில் உள்ள வீட்டுக்கு திரும்பும் போது மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டார். 3 நாட்களுக்கு பிறகு அரியானாவில் உள்ள சூரஜ்குந்த்  பகுதியில் சிக்‌ஷா பிணமாக கிடந்தார்.

இந்த  கொலை தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜித் சிங்   ஆகிய 3 பேர் கைதாகினர். கடந்த ஜூலை 14ம் தேதி இந்த வழக்கில் 3பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கான  தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.  பல்ஜித் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, தங்கள் மகளை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிக்‌ஷாவின் பெற்றோர்  நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இந்த குற்றவாளிகள் 3 பேரும் கடந்த 2008ம் ஆண்டு டிவி பெண் நிருபர் சவும்யா கொலை வழக்கிலும்  சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.