August 22, 2016
250 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்குகிறது Aitel-Samsung பார்ட்னர்ஷிப்
Samsung Galaxy J series ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 GB 4G டேட்டா வழங்குவதாக Airtel நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏர்டெல் ஃப்ரீபெய்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்படி, Airtel வாடிக்கையாளர்கள் 10 ஜிபி 4ஜி டேட்டா பயன்படுத்த ரூ.250 செலுத்தினால் போதும்.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட Samsung Galaxy J series ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் Airtel நிலையங்களில் அல்லது www.offers.airtel.com என்ற இணைய முகவரியில் Log in செய்வதன் மூலம் சலுகையைப் பெற முடியும்.
இந்த சலுகையைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள Airtel மார்க்கெட்டிங் செயலக இயக்குநர் அஜய் புரி, “இந்த பார்ட்னர் ஷிப், ஏர்டெல்லின் 4G அனுபவத்தை மக்களிடத்தில் பரவலாக்கும் என நம்புகிறோம்”எனத் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் 3G இண்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவோருக்கு 10 GB 3G டேட்டா வழங்கப்படுகிறது. இதில், 1 GB பகலிலும் 9 GB இரவிலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
250 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்குகிறது Aitel-Samsung பார்ட்னர்ஷிப்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.