August 18, 2016
ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு ரூ.2.5 கோடி பரிசு - அரசு வேலை: ஹரியானா அரசு அறிவிப்பு!
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு, இரண்டரை கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் அரசு வேலையையும் வழங்குவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில், ஹரியானா மாநிலத்தில் இருந்து பங்கேற்ற இந்திய வீராங்கனை சாக்-ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நாட்டுக்கும், ஹரியானா மாநிலத்திற்கும் பெருமைத் தேடித்தந்த சாக்-ஷி மாலிக்கிற்கு, இரண்டரை கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் அரசு வேலையும் வழங்குவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
வாழ்த்து மழையில் சாக்ஷி:
பதக்கம் வென்ற சாக்ஷிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த வெற்றியின் மூலம் இந்தியர்களை சாக்ஷி பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இதே போல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சாக் ஷியின் வெற்றி இளம் வீரர்களுக்கு உந்துதலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு ரூ.2.5 கோடி பரிசு - அரசு வேலை: ஹரியானா அரசு அறிவிப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
August 18, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.