Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

காஷ்மீரில் 24-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு



காஷ்மீரின் தொடர்ந்து 24-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருந்தது. அனைத்து இடங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அனந்த்நாக், ஸ்ரீநகர் மற்றும் அதையொட்டிய நவ்ஹாட்டா, கன்யார், ரெனாவாரி, சஃபாகடல், மஹாராஜ்கஞ்ச் ஆகிய 5 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தது. தவிர ஒட்டுமொத்த காஷ்மீர் பகுதியிலும், 4 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், பொதுமக்கள் படுகொலையைக் கண்டித்து, பிரிவினைவாதிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலை போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.

காஷ்மீர் பகுதிகள் முழுவதிலும் மொபைல் போன் சேவைகள், இணைய சேவைகள் போன்றவை தொடர்ந்து முடங்கிய நிலையிலேயே இருந்தது. எனினும், ‘போஸ்ட்பெய்டு மொபைல்’ சேவைகளை மட்டும் சில நிறுவனங்கள் வழங்கின. அதேபோல், ‘ப்ரீபெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு ‘இன்கமிங்’ அழைப்புகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. ‘அவுட்கோயிங்’ தடை செய்யப்பட்டிருந்தது.

இதனால், காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து 24 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பிரிவினைவாத அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை அன்று பேரணியுடன் போராட்டம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதில், 49 பேர் கொல்லப்பட்டனர். 5,600 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமான பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.