குஜராத் மாநிலத்தில் தலித்கள் எதிராக இந்துத்வாவாதிகளின் கொடுமையினால் பா.ஜ.க தலைவர் பாபு பான்வத்ரா தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
குஜராத்தின் போர்பந்தர் பகுதியை சேர்ந்த இவர் தலித்கள் மீது இழைக்கப்படும் இந்த கொடுமைகளை பா.ஜ.க தடுக்காததும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி வழங்க இயலாததும் தனது இந்த முடிவிற்கு காரணம் என்று கூறியுள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜூலை 30 ஆம் தேதி கொடுத்துள்ளார்.
பாபு பாண்டவத்ரா கடந்த 26 வருடங்களாக பா.ஜ.க வில் இணைத்து செயலாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு போர்பந்தரின் சோதனா கிராமத்தில் உள்ள தலித் விவசாயி ராம சிங்கர்கியாவின் கொலை விஷயத்தில் பா.ஜ.க தலைவர்கள் காட்டிய மெத்தனப் போக்கு குறித்தே அதிருப்தியில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அரசு நிலம் ஒன்றில் 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார் ராம சிங்கர்கியா. இவர் அக்கிராமத்து தலைவர் அர்பம் கரவத்ரா மற்றும் அவருடன் சேர்ந்த மற்றும் 35 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கரவத்ரா உயர் ஜாதி வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இந்த கொலை தொடர்பான விசாரணையை தடுக்க முயன்றனர் என்று பாண்டவாத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
பாண்டவத்ரா பா.ஜ.க. தலைவர் விஜய் ருபானிக்கு எழுதிய கடிதத்தில், பா.ஜ.க மாநில அரசு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் தலித்களுக்கு நீதி வழங்குவதில்லை என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.