August 30, 2016
சாலை விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சேதுவராயன் குப்பத்தை சேர்ந்த சகோதரர்கள் அஜித் மற்றும் விஜயரசு, இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொடியரசு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரையும், தமது இரு சக்கர வாகனத்தில் கொடியரசு அழைத்து சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி-விருத்தாசலம் சாலையில் வந்த போது, இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், மூவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.