Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

18 ஆண்டுகளுக்கு பின்னர் வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் விடுதலை !!!



சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்தது. நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதில், வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளாக சேலம், கோவை, மைசூரு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரும் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக காவல் துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.