August 16, 2016
கடத்தப்பட்ட குழந்தை 17 வயது பெண்ணாக மீட்பு
பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள். அவளை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர்.
தாய் மயக்கமாக இருந்த போது ஒரு பெண் பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார்.
இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 17 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்தாள்.
எனவே உடன் படித்த இவளது தோழிகள் அந்த மாணவி உனது உடன் பிறந்த சகோதரியா? என கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவள் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் குழந்தையை கடத்திய பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அப்போது, அவள் தனது மகள் என்றாள். அவளது பதில் திருப்தி அளிக்காததால் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது. அப்போது டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் அவள் கடத்தப்பட்ட குழந்தை ஷெபானி நர்ஸ் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து நீதிமன்றம் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தப்பட்ட சிறுமி ஷெபானி நர்ஸ்ஸை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தையை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட குழந்தை 17 வயது பெண்ணாக மீட்பு
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.