August 20, 2016
பாலியல் தொழிலுக்காக 16 வயது மகளை விற்க முயன்ற பெண் கைது
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப்பகுதியான கோவண்டியைச் சேர்ந்த ஒரு பெண், தானே பகுதிக்கு வந்து மைனர் பெண்ணை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், இதற்கான ஆட்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் பேரம் பேசுவதுபோன்று நாடகமாடி போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து பேசியபோது, தனது 16 வயது மகளை 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசினார். பின்னர் 4.25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அட்வான்ஸ் தொகையை வாங்கியதும் கையும் களவுமாக அந்த பெண்ணை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், மூன்று முறை திருமணமான அந்த பெண் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தனது கணவருக்கு பிறந்த மகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. அவர் மீது வேகல் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தானே காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கைது செய்யப்பட்ட பெண் தனது சகோதரியின் மகளின் திருமணத்தை நடத்துவதற்காக 5 லட்சம் ரூபாய்க்கு பெற்ற மகளை விற்பனை செய்ய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks To: Malaimalar
பாலியல் தொழிலுக்காக 16 வயது மகளை விற்க முயன்ற பெண் கைது
Reviewed by மறத்தமிழன்
on
August 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.