Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சமுத்துவிற்கு 15 நாள் காவல்



மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 75 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு தொடர்பாக எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். குறிப்பாக மாணவர்களிடம் வசூலித்த சுமார் 72 கோடி ரூபாய் பணம் குறித்தும், மதனை எங்கு மறைத்து வைத்துள்ளீர்கள் என்பது குறித்தும் 300 கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.

தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய பச்சமுத்து, சில கேள்விகளுக்கு மவுனம் சாதித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பச்சமுத்து மீது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கூட்டுசதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் பிரகாஷ் முன்பு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பச்சமுத்து சார்பில் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் ஆஜர்டுபத்தப்பட்ட பச்சமுத்துவை செப்டம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.