மும்பையில் கவர்னர் வசிக்கும் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாள சுரங்கம் இருப்பதை கவர்னர் வித்யாசாகர் ராவ் கண்டுபிடித்திருக்கிறார். மூடிக்கிடந்த சுரங்கப்பாதையை ஊழியர்களை கொண்டு அவர் திறந்து பார்த்த போது, இந்த பாதாள சுரங்கம் தென்பட்டது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கவர்னர் குடியிருக்கும் ராஜ்பவன் உள்ளது. இந்த ராஜ்பவன் வளாகத்திற்குள் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த போதிலிருந்தே இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டு கிடந்தது. அதை யாரும் திறந்து பார்க்க முயற்சிக்கவில்லை. தற்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவிடம் அந்த சுரங்கப்பாதை குறித்து ஊழியர்கள் சாதாரணமாக தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு அதை திறந்து பார்க்க ஆசை ஏற்பட்டது.
இந்நிலையில், கவர்னர் நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகளை வரவழைத்து அந்த சுரங்கப்பாதையை திறக்க உத்தரவிட்டார். அதிகாரிகளும் உடனடியாக ஊழியர்களை வரவழைத்து பாழடைந்த சுரங்கப்பாதை சுவர்களை இடித்து திறந்து விட்டனர். அதன்பின், கவர்னர் தனது மனைவி வினோதாவுடன் அந்த சுரங்கப்பாதைக்குள் சென்றார். அதிகாரிகளும், ஊழியர்களும் பின்தொடர்ந்து சென்றனர். சுரங்கப்பாதைக்குள் சென்றால், அங்கு ஒரு பெரிய பங்களாவே இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். சுமார் 5 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பாதாள சுரங்கத்திற்குள் சிறியதும், பெரியதுமாக மொத்தம் 13 அறைகள் இருந்தன.
பாதாள அறைகளை பார்த்து வியந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இது பற்றி முதல்வர் பட்நாவிசுக்கு தெரிவித்தார். இதையடுத்து, ராஜ்பவனுக்கு வந்த முதல்வர் பட்நாவிஸ், பாதாள சுரங்கத்தை பார்த்தார். தற்போது மகாராஷ்டிராவில் இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதாள சுரங்கம் பற்றி ஜனாதிபதிக்கும் கவர்னர் தகவல் தெரிவித்திருக்கிறார். பாதாள சுரங்கத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிட உள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்த ராஜ்பவன் வளாகம், ‘கவர்மென்ட் ஹவுஸ்’ என்ற பெயரில் கவர்னர்கள் தங்கும் மாளிகையாகவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.








No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.