Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் பலி - 25 போலீசார் சஸ்பெண்ட்!



பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 25 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மது விலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதனால், அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் யாகினர். கடந்த செவ்வாய்க்கிழமை வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாக 25 போலீசாரை, காவல்துறை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.