Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த 12 வயது சிறுவன் கைது



உடம்பில் வெடிகுண்டுகளுடன் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த 12 வயது சிறுவனை ஈராக் குர்து பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

ஈராக்கின் கிர்குக் நகரில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் இடுப்பில் கட்டிய வெடிகுண்டுகளுடன் தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்றான். இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்த குர்து பாதுகாப்புப் படையினர் சிறுவனின் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் வெளியிட பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் விசாரணை நடந்து வருவதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.