August 10, 2016
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து!
காதலிக்க மறுத்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளைத்தை சேர்ந்தவர் கிருத்திகா. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், கிருத்திகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிருத்திகாவின் வீட்டுக்கு சென்ற சுரேஷ், கத்தியை காட்டி மிரட்டி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் கிருத்திகாவையும், அவரது பாட்டியையும் கத்தியால் கைகளில் தாக்கிவிட்டு தப்பிவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.