Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 22, 2016

பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி


ஆந்திர மாநிலம் கம்மம் அருகே நாயக்கன்கூடம் எனுமிடத்தில் மேம்பாலத்திலிருந்து பேருந்து ஒன்று நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடா நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 31 பேர் இருந்தனர். அவர்களில் 26 பேர் பயணிகள். 6 பேர் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள்.

பயணிகள் அனைவரும் கிருஷ்ணபுஷ்கரத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ஊரான சித்தூர் மதனப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்.


அப்போது கம்மம் அருகே நாயக்கன்கூடம் எனும் இடத்தில் மேம்பாலத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே இருந்த கால்வாயில் விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த 31 பேரில் 11 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மீட்புப் பணிகளை விரைந்து நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.