August 3, 2016
“இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை
தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.f
“இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.