August 3, 2016
சவுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் ஜெயலலிதா!
சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது, முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்த தாட்சாயிணிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் தாட்சாயிணி என்பவர் ஏழ்மை காரணமாக சவுதி அரேபியாவுக்கு பணிக்கு சென்றார். அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியில் இருந்து குதித்ததில், அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தாட்சாயிணியின் குடும்ப சூழ்நிலை, உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார். இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பில்,10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தாட்சாயிணி மற்றும் அவரது தாயாரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
சவுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் ஜெயலலிதா!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.