August 25, 2016
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்ல வேன் மறுக்கப்பட்டது, 10 கி.மீ. தூரம் மனைவியின் சடலத்தை தூக்கிசென்ற க
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது.
ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில் புதன்கிழமை காலையில் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நேரிட்டது, அது வறுமையினால் பாதிக்கப்பட்ட தானா மஜ்கி தன்னுடைய மனைவியின் சடலத்தை தூக்கிச் செல்லும் காட்சிதான். போர்வையால் சுற்றப்பட்ட சடலத்தை தானா மஜ்கி, தன்னுடைய 12 வயது மகளுடன் சேர்ந்து 10 கிலோ மீட்டர் தொலைவு தூக்கிசென்று உள்ளார். சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனை அதிகாரிகள் பணம் கேட்டு உள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் கொடுக்கும் வசதியில்லை என்று தானா மஜ்கி கூறிஉள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியின் சடலத்தை தானாகவே எடுத்துச் செல்ல தொடங்கிவிட்டார்.
ஒடிசா மாநிலம் காலாகாண்டி மாவட்டம் வருமையினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள மெல்காராவே தானா மஜ்கியின் கிராமாகும். கிராமம் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 60 கிலோ மீட்டர் தொலைவும் சடலத்தை தானே எடுத்துச் செல்ல தானா மஜ்கி முயற்சி செய்து உள்ளார். 10 கிலோ மீட்டர் தொலைவு கடந்ததும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இடைமறித்து, வேனில் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய மஜ்கி, “நான் மிகவும் ஏழ்மையானவன் என்றும் என்னால் பணம் கொடுக்க முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் உதவிசெய்ய முடியாது என்று கூறிவிட்டனர்,” என்றார். மாநிலத்தில் ஏழைகளின் சடலங்களை எடுத்து உதவிசெய்யும் விதமாக நவீன் பாட்நாயக் அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள் மாவட்ட கலெக்டருக்கு அழைப்பு விடுத்து சடலத்தை வேனில் எடுத்துச் செல்ல உதவிசெய்தனர். பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. காலிகேஷ் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,
“இச்சம்பவத்தை ஆய்வு செய்யவும், சரியான நடவடிக்கை எடுக்கவும் மாநில மந்திரியிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன்,” என்று கூறிஉள்ளார்.
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்ல வேன் மறுக்கப்பட்டது, 10 கி.மீ. தூரம் மனைவியின் சடலத்தை தூக்கிசென்ற க
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.