August 15, 2016
பிரபல நகைக்கடையில் 10 கிலோ நகை கொள்ளை!
அம்பாசமுத்திரத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, கடை ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பிரபல நகைக்கடையை வழக்கம்போல் ஊழியர்கள் திறக்கச் சென்ற போது, கடையின் பூட்டுக்கள் திறந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை சரக டி.ஐ.ஜி.தினகரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுமார் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
கடையின் கதவுகள் உடைக்கப்படாமல் திறக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதால், கடையில் வேலை செய்யும் ஊழியர்களே நகையைக் கொள்ளையடித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடை ஊழியர்கள் 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து எட்டரைக்கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பிரபல நகைக்கடையில் 10 கிலோ நகை கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.