August 3, 2016
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி நகை, பணம் கொள்ளை முயற்சி
சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் நகைகளை ரவுடி கும்பல் பறிக்க முயன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரகுநாதன், நேற்று காவிரியாற்றில் குளிப்பதற்காக வந்துள்ளார். மேட்டூர் காவேரி பாலம் அருகில் வந்த போது புதர் மறைவில் மறைந்திருந்த மேட்டூர் மாதையன் பகுதியை சேர்ந்த ரவுடி பிரபு, அவரது தம்பி அம்மு உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரகுநாதனை வழிமறித்துள்ளது.
அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் பணத்தை பறிக்க முயன்றபோது தடுத்ததால் பயங்கர ஆயுதங்களால் அக்கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ரகுநாதன் கூச்சலிட்டதால் வழிப்பறி கும்பல் தப்பியோடிவிட்டது. இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி நகை, பணம் கொள்ளை முயற்சி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.