August 3, 2016
சவுதியில் வேலையின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை
வேலை இழந்து உணவின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை மீட்டுவருவதற்காக, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி சென்றடைந்தார்.
சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் சவுதி அரசு சிக்கன நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அரசின் ஒப்பந்தங்களைச் சார்ந்திருந்த பல கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக அங்கு வேலை பார்த்த 10 ஆயிரத்திறகும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையிழந்து, உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.
அவர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சவுதி சென்றடைந்துள்ளார்.
சவுதியில் வேலையின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.