Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

எகிப்து பிரமிடுகளுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய பிரமிடுகள். ஒரு ஆச்சர்ய உண்மை



எகிப்து பிரமிடுகளுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய பிரமிடுகள். ஒரு ஆச்சர்ய உண்மை
பிரமிடுகள் என்றாலே எகிப்துதான் என்றும் எகிப்து நாட்டில்தான் பழமையான பிரமிடுகள் காணப்படுவதாகவும் இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் எகிப்து பிரமிடு தோன்றுவதற்கு 1000 ஆண்டுகள் முன்பே கஜகஸ்தானில் பிரமிடுகள் இருந்துள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தில் இருந்து சுமார் 4000 மைல்கள் தொலைவில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது போன்ற பிரமிடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கஜகஸ்தான் பிரமிடுகள் சிதைந்த நிலையில் இருப்பதாகவும், இந்த பிரமிடுகள் வேண்டுமென்றே சிலரால் மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிதைந்த நிலையில் உள்ள இந்த பிரமிடுகளை கஜகஸ்தான் நாட்டின் Saryarkinsky Archeology Institute என்ற அமைப்பு மேலும் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரமிடுகள் குறித்த பல ஆச்சரியத்தக்க தகவல்கள் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.