Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

கத்தார் கப்பல் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம்



மும்பை கடற்பகுதியில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயுடன் கப்பல் மூழ்கிய விபத்தால், கடல் வளம் பாதிக்கப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், கத்தார் நாட்டு கப்பல் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பனாமா நாட்டுக் கொடியுடன் எம்.வி.ரக் என்ற சரக்கு க்கப்பல், 60 ஆயிரம் டன் நிலக்கரி, சுமார் 300 டன் கச்சா எண்ணெய், 50 டன் டீசல் உடன் இந்தோனேசியாவில் இருந்து, கடந்த 2011-ம் ஆண்டு குஜராத் துறைமுகத்திற்கு சென்றது.

கப்பலில் இருந்த நிலக்கரி முழுவதும், குஜராத்திலுள்ள அதானி அனல் மின் நிலையத்திற்காக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மும்பையில் இருந்து 25 கடல் மைல் தொலைவில், வந்துகொண்டிருந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கியது.

விசாரணையில் கடலில் மூழ்கிய அந்தக் கப்பல் கத்தார் நாட்டைச் சேர்ந்த டெல்டா ஷிப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயுடன் கப்பல் மூழ்கியதால், கடல் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்., கத்தார் கப்பல் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று, அதானி நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.