ரியோ ஒலிம்பிக்ல. 100 மீட்டர் ஓட்டத்துல உசேன் போல்ட்டுடன் ஓடுவதற்கு 7 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் , வான்கூவர்ல நடந்த மாஸ்டர்ஸ் தடகளப் போட்டில நம்ம 100 வயசு இந்திய பாட்டியோட போட்டி போட்டு ஓடக் யாரும் தகுதி கூட பெறவில்லை
அமெரிக்க மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி வான்கூவரில் நடைபெற்றது. இதுவும் ஒலிம்பிக் போலத்தான். 10 ஆயிரம் தடகள வீரர்- வீராங்கனைகள் பங்கேற்ற போட்டி இது. ஒரே விதி 30 வயசுக்கு மேல இருக்கனும். இந்த போட்டியில் சண்டிகாரைச் சேர்ந்த நம்ம இந்திய பாட்டி மான் கவுர் பங்கேற்றார். இவருக்கு வயது 100. பாட்டியோட இலக்கு 100 மீட்டர் ஓட்டத்துல தங்கம் ஜெயிப்பதுதான். இதுல இன்னொரு விஷேசம் என்னனா...நம்ம பாட்டி கூட ஓடுறதுக்கு 100 வயசுல யாருமே மைதானத்துல தென்படல. பாட்டியும் தேடி தேடி பார்த்துட்டு நம்ம முதல்வர் ஜெயலலிதா ஸ்டைல்ல ,'எதிரிகளே கண்ணுக்கு தெரியலேயேனு' சொல்லிருக்காங்க.

உசேன் போல்ட்டே 100 மீட்டர் ஓட்டத்தை 10 விநாடிகள்ளதான் முடிச்சுருக்காரு. ஆனா நம்ம பாட்டி 100 மீட்டர் ஓட்டத்தை 100 வயசுல ஒன்றரை நிமிஷத்துல கடந்து தங்கம் ஜெயிச்சுருக்காங்க. கவுர் பாட்டி இலக்கை தொட்ட போது, 80, 90 வயசுல உள்ள பெருசுங்க எல்லாம் ஓடி வந்து கட்டி பிடிச்சுக்கிட்டாங்க. இலக்கை கடந்ததும் நம்ம பாட்டி. கொஞ்சம் தண்ணீர் மட்டும்தான் குடிச்சாங்க. அதுக்கு முன்னாடி, ஈட்டி எறிதல்லயும் நம்ம பாட்டிக் கூட போட்டி போட, யாரும் இல்ல. நம்ம பாட்டிக்குத்தான் தங்கம். அடுத்து குண்டு எறிதல். அங்கேயும் மோத யாருக்கும் 'தில் ' இல்ல. அங்கெல்லாம் தங்கம் ஜெயிச்சுட்டுதான் 100 மீட்டருக்கு வந்து பட்டையை கிளப்பிருக்காங்க.
வான்கூவர் மாஸ்டர் தடகளப் போட்டில மொத்த அட்ராக்சனும் நம்ம கவுர் பாட்டிதான். கவுர் பாட்டி குறித்து அவரது 78 வயசு மகன் குர்தேவ்சிங், '' அம்மா 93 வயசுல இருந்துதான் ஓட ஆரம்பிச்சாங்க. சண்டிகர்ல இருக்கும் போது தினமும் பிராக்டீஸ் பண்ணுவாங்க .உலகம் முழுக்க பல இடங்களுக்கு சென்று 20 பதக்கங்கள் ஜெயிச்சுருக்காங்க.இன்னும் ஜெயிப்பாங்க. இங்க 100 மீட்டர் ஓடி முடிச்சதும் அம்மாட்ட மூட்டு ஏதாவது வலிக்குதானு கேட்டேன். ஆனா, அவங்க ரொம்ப கேசுவலா இருந்தாங்க. வயசானவங்க வீட்டுல முடங்கிறக் கூடாதுங்கறதுதான் அவங்க நோக்கம். பெண்கள் நிறையே பேர் ஓட்டப்பந்தயத்துக்கு வரணும். குழந்தைகள அவங்க விருப்பப்படி விளையாட விடணும்ங்கறதுதான் அம்மாவோட விருப்பம். அதனாலத்தான் இந்த வயசுலயும் உலகம் பூரா சுற்றி சுற்றி ஓடுறாங்க '' என்கிறார் பெருமிதம் பிடிபடாமல்.
கடந்த1984ம் ஆண்டு ஒலிம்பிக்ல வெள்ளி வென்ற கனடா வீராங்கனை சேரமைன் க்ரூக்ஸ், ''இன்னும் 50 வயசு என்னால வாழ முடியுமானு நான் நினைக்கிறேன். கவுர் பாட்டி என்ன அப்படி நினைக்க வச்சுட்டாங்க '' என புகழாரம் சூட்டியிருக்காங்க.
லண்டனில் இருந்து வெளி வரும் டெய்லி மெயில், ஆன்லைன்ல 100 -year old runner from india inspires at masters game னு தலைப்பு வச்சு செய்தி போட்டுருக்ககாங்க.
சோ ... காலர தூக்கி விட்டுக்குங்க இன்டியன்ஸ்...!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.