August 28, 2016
திருச்சியில் 1 கோடி பிரவுன்சுகர் பறிமுதல் 4 பேர் அதிரடி கைது
கல்லூரி மாணவர்களிடம் விற்க கொண்டு வந்த ரூ.1 கோடி பிரவுன்சுகர் பறிமுதல்: திருச்சியில் சந்திரமோகன். திருவேங்கடம்.
முரளிதரன்
சதீஷ்குமார் 4 பேர்
அதிரடி கைது
கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய பிரவுன் சுகர் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பிரவுன் சுகர் போதைப்பவுடரை ஒரு கும்பல் கடத்தி வருவதாக அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் கென்னடிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அரியமங்கலம் மெயின் ரோடு லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்ேபாது டவுன் பஸ்சில் வந்து இறங்கிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர்.
அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ பிரவுன் சுகர் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி. இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சின்னமலைரோடு ஆனந்தி நகரை சேர்ந்த சந்திரமோகன்(40), நாமக்கல் குமாரபாளையம் காவேரி நகர் சதீஷ்குமார் (36), திருச்செங்கோடு பக்தவச்சலம் நகரை சேர்ந்த திருவேங்கடம் (38), திருச்செங்கோடு சிவசக்தி நகரை சேர்ந்த முரளிதரன்(39) என தெரியவந்தது.
4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பிரவுன் சுகரை பறிமுதல் செய்தனர். அவர்களை நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான சதீஷ்குமாரின் சகோதரி மகன், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படித்த போது, அவருடன் திருச்சியை சேர்ந்த 2 பேர் படித்துள்ளனர். தற்போது அந்த 2 பேரில் ஒருவர் ஏரோநாட்டிகல், மற்றொருவர் கலைஅறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் கலைஅறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் உதவிகள் செய்யுமாறு சதீஷ்குமாரிடம் அவரது சகோதரி மகன் கூறியுள்ளார். இதையடுத்து கலை அறிவியல் மாணவரை சந்தித்த சதீஷ்குமார், தங்களிடம் போதை பவுடர் இருப்பதாகவும், அதனை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம்.
தற்போது ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ பிரவுன்சுகர் தருகிறோம். அதை விற்று ரூ.50 லட்சம் மட்டும் எங்களுக்கு கொடுத்தால் போதும். மீதி தொகையை நீங்கள் எடுத்து கொள்ளலாம். மேலும் இதுபோல் பல கல்லூரிகளில் உள்ள மாணவர்களை சந்தித்து விற்றால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், ஏரோநாட்டிகல் படிக்கும் மாணவரை சந்தித்து திட்டம் குறித்து கூறியுள்ளார். இது போலீசுக்கு தொிந்தால் சிக்கலாகி விடும் என ஏரோநாட்டிகல் மாணவர் கூறியுள்ளார். எனினும் அவருக்கு தைரியம் கொடுத்துள்ளனர்.
ஆனாலும் பயந்து போன ஏரோநாட்டிகல் மாணவர் இது குறித்து அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் போதை பவுடர் கும்பலை கைது செய்ய திட்டம் உருவாக்கினர். அந்த திட்டத்தின் படி, போதை பவுடர் கும்பலை திருச்சிக்கு வரவழைத்து கைது செய்தோம் என்றனர்.
நன்றி ; தினகரன்
திருச்சியில் 1 கோடி பிரவுன்சுகர் பறிமுதல் 4 பேர் அதிரடி கைது
Reviewed by மறத்தமிழன்
on
August 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.