' புதிய திரைப்படங்களின் திருட்டு சி.டிக்கள் வெளியாவதற்கு இலங்கைத் தமிழர்கள்தான் காரணம்' என இயக்குநர் சேரன் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ' நாங்கள்தான் வெளியிடுகிறோம் என ஆதாரத்தைக் காட்ட முடியுமா?' எனக் கொந்தளிக்கின்றனர் வெளிநாடுவாழ் தமிழர்கள்.
'கன்னா பின்னா' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கமலா திரையங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் சேரன், " தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டி.வி.டி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கின்ற அனைத்துக் கடைகளிலும் திருட்டு டி.வி.டி விற்கிறார்கள். போலீஸாரும் அதைத்தாண்டித்தான் தினமும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை. சட்டங்கள் சரியாக இல்லாததுதான் இதற்குக் காரணம். தமிழ்...தமிழ் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தமிழன்தான் இதுபோன்ற வேலைகளைச் செய்து வருகிறான். திருட்டுத்தனமாக ஆன்லைனில் படத்தை வெளியிடுகிறவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகமே திரண்டு குரல் கொடுத்துப் போராடியது. எங்களுடைய பல விஷயங்களை இழந்துவிட்டு, அவர்களுக்காக போராடி இருக்கிறோம். அவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறபோது, இவர்களுக்காகவா இதைச் செய்தோம் என அருவறுப்பாக இருக்கிறது" எனக் கொந்தளித்திருந்தார்.
சேரனின் இந்தத் தாக்குதலை, புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து இயக்குநர் சேரனுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் லண்டனைச் சேர்ந்த பரமேஸ்வரன். அவரிடம் பேசினோம். " எங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் சேரன் பங்களிப்பு செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். ' ஈழத் தமிழர்கள்தான் திருட்டு வி.சி.டி வெளியிடுவதற்குக் காரணம்' என்றரீதியில் பேசியதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக, ' ஈழத் தமிழருக்காக போராட்டம் நடத்தியதற்காக அருவறுப்பு அடைகிறேன்' என்று பேசியது எந்த வகையில் நியாயம்? உலகம் அறிந்த சேரன் எதைப் பற்றியும் யோசிக்காமல், திருட்டு படங்களை வெளியிடுகிறவர்களையும் விடுதலைக்கான போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் முடிச்சுப் போட்டு பேசியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்தைத் தாழ்மைப்படுத்திவிட்டார்.
தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அவர் எப்போதாவது அருவறுப்பு அடைந்தது உண்டா? இப்போதெல்லாம் படம் வெளியாகும்போதே திருட்டு சி.டி வெளியாகிறது. இதையெல்லாம் யார் வெளியிடுகிறார்கள்? உலகத் திரைப்படம் என்று தமிழகம் இன்று உச்சரிப்பதற்கு மிக முக்கியக் காரணமே நாங்கள்தான். தமிழக திரைத்துறையை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர்கள் ஈழத்தமிழர்கள். ஈழத்தமிழர்களால் தமிழக திரைத்துறை இழந்ததை விட பெற்றதே அதிகம் என்பதை சேரன் மறுக்க மாட்டார். இன்றைக்கு தமிழ் சினிமா வரலாற்றில் அதிக செலவில் படமெடுப்பதும் நடிகர் சங்கத்திற்கு அதிக நன்கொடை கொடுத்தவர்களில் ஈழத் தமிழரும் ஒருவர் என்பதை ஏற்றுக் கொள்வாரா? ஈழத்தில் இருந்து கிளம்பிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரையாவது தமிழக திரைத்துறை வளர்த்தெடுத்திருக்கிறதா? அதற்காக நாங்கள் தமிழகத்தின் மீது அருவறுப்பு அடையவில்லையே? புலம்பெயர் நாடு, ஈழம் என எங்களை நோக்கி வந்த தமிழக திரைத்துறையினரை சிறப்பித்தே அனுப்பியுள்ளோம். நீங்கள் போராடியது வீழ்ந்துபோன மாவீரர்களுக்காக? விடுதலையை நேசித்த மக்களுக்கா? அல்லது திருட்டு படங்கள் வெளியிடுகிறவர்களுக்காகவா?
புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்துதான் திருட்டு படங்கள் வெளிவருகின்றது என்பது உறுதி என்றால், காலம் தாழ்த்தி அந்நாடுகளில் திரைப்படத்தை வெளியிடுங்கள். பிறகு திருட்டு சி.டிக்கள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறியலாம். திருட்டு படங்கள் ஈழத்தமிழர்கள்தான் வெளியிடுகின்றனர் என எந்த ஆதாரத்தில் சொல்கிறார் சேரன். சில வெளிநாடுவாழ் தமிழர்கள் என்றதோடு முடித்திருக்கலாம். தன்னுடைய பேச்சை சேரன் திரும்பப் பெறும்வரை ஓய மாட்டோம்" என்றார் கொந்தளிப்போடு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.