சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரத்திலிருந்து கோயம்பேடு வந்து மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வரும் 23 வயதான செல்வக்குமார், தினசரி அந்த மாணவியை பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்த செல்வக்குமார், வரும் 11-ஆம் தேதிக்குள் தன்னை காதலிக்காவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும் என மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல்நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் செல்வக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.