Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!


மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?

டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.

கூகுள்-ஸியோமி கைகோர்ப்பு

சாம்சங் நிறுவனம் ஓக்குலஸுடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அதே போல், லெனோவோ நிறுவனம், ANT நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் தொழில்நுட்பக் கண்ணாடிகளை வழங்குகிறது. இந்நிலையில் மெ.நி கருவிகள் உருவாக்கத்தில், சீனாவின் ஸியோமி நிறுவனம் கூகுளுடன் கைகோர்த்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில், ஆரம்பித்த ஷியோமியின் வளர்ச்சி, ஸ்மார்ட் ரைஸ் குக்கர், ஏர் ப்யூரிஃபயர் என வேறு தளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டின் கூகுள் டெவலப்பர், மாநாட்டில் ஸியோமியின் தலை தென்பட்டதிலிருந்து, நிச்சயம் ஸியோமி கூகுளுடன் இணைந்து சில கருவிகளை வெளியிடும், என்ற யூகம் பரவி வந்தது
 

முக்கிய அம்சங்கள்

வரவிருக்கும் ஸியோமி மெ.நி ஹெட்செட்,  கூகுளின் முந்தைய வெளியீடுகள் போலல்லாமல்  மிகச்சிறந்த உணர்வுபூர்வ அனுபவத்தை ஆன்ட்ராய்டு போன்களின் வழியே அளிக்கக்கூடியது. இக்கருவியுடன் தூண்டில் அல்லது ஸ்டீரிங் (steering) வடிவ இயக்க உணர்வு (motion sensor) ரிமோட் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. கூகுள் ஆண்ட்ராய்டு, இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான நௌகட்(nougat)-ஐ கொண்ட போன்களிலும் செயல்படும் வகையில் தயாராகி இருக்கிறது, இந்த ஹெட்செட்.

இந்த ஹெட்செட் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் மற்ற ஸியோமி தயாரிப்புகளைப் போலவே குறைந்த விலை கொண்டிருக்கும் என்று நம்பலாம். அதற்கு ஏற்றார் போல், ஷியோமி நிறுவனம், புதுரக மொபைல் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.