Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள் வளாகம் : மாகாராஷ்டிராவில் கட்டப்பட்டுள்ளது


மகாராஷ்டிரா மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள் வளாகம் கட்டபட்டுள்ளது.


பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் அதனை செயல்படுத்திட தீவிரம் காட்டி வருகிறார். இதன் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் நகரில் உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள் வளாகம் கட்டப்பட்டுள்ளது. அம்மாநில அரசு மற்றும் சுலாபா அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் இணைந்து எட்டு அடுக்கு மாடியில் மொத்தம் 1417 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனுடன் குளியறைகளும் தனியாக கட்டப்பட்டுள்ளன.

தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி பிந்தேஷ்வர் பதக் கூறுகையில், பந்தர்பூர் நகரில் மொத்தம் 2,858 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1417 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் முழுவதும் கட்டி முடிக்கப்படும். கோயில் நகரமான இங்கு வரும் 15-ம் தேதி முதல் 11 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. அப்போது லட்சகணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவர். இந்த கழிப்பறைகள் வளாகத்தில் தினமும் 1.5 லட்சம் பேர் உபயோகப்படுத்தலாம் என்றார்.

1,000 கழிப்பறைகள் கொண்ட மிகப்பெரிய கழிப்பறைகள் வளாகம் சீனாவில் உள்ளது. இதனை மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் கழிப்பறைகள் வளாகம் முறியடித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.