Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

பர பரவென விற்கும் போதை வஸ்துகள்.. அசராத பெண்


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. காவல்துறையினரின் அனுமதியுடன் இந்த விற்பனை நடந்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி புகையிலைப்  பொருட்கள் விற்பனை நடந்துதான் வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை ஆர்கேநகர் பகுதியில் பள்ளிக்கு வெளியே பெட்டிக்கடை ஒன்றில் சாக்லெட் வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகுதான் காவல்துறையினர் விழித்துக் கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஆயிரக்கணக்கான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்ததோடு, 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடவடிக்கை ஒருபுறம் நடந்தாலும், மற்றொருபுறம் விற்பனை படுஜோராகத்தான் நடந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே புகையிலைப் பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, படிப்பு நிமித்தமாக சென்று வருகின்றனர். பயணிகள் செல்லும் வழியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதால் பெண் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து பெண் பயணிகள் கூறுகையில், நாங்கள் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். தினமும் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கிண்டி செல்வதற்காக பூங்கா ரயில் நிலையம் வந்து இங்கிருந்து ரயிலை பிடித்து வேலைக்கு செல்வோம். பூங்கா ரயில் நிலையம் வரும் வழியில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்கள் கூட்டமாக நின்று புகையிலை வாங்குவதால் குறுகிய இடத்தில் எங்களால் செல்ல முடியவில்லை. மிகவும் சிரப்படுவதோடு, அச்சமாகவும் இருக்கிறது. இங்கு வரும் காவல்துறையினரை அவர்கள் கவனித்து விடுகின்றனர். இதனால்தான் அவர்கள் சுதந்திரமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அரசு தடை செய்திருந்தாலும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் விற்பனை நடப்பது வேதனையாகத்தான் இருக்கிறது" என்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளரிடம் தொடர்பு கொள்ளப்பட்டது  அவர், இது எங்கள் கன்ட்ரோலில் வராது. பெரியமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்றார். இதைத் தொடர்ந்து பெரியமேடு காவல்நிலை ஆய்வாளரை தொடர்பு கொள்ளப்பட்டது . அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.