நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தான் ஆசையாக வளர்த்து வந்த நாய்க்குட்டியை தூக்கி தனது கணவர் வெளியில் விட்டு விட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தீக்குளித்து விட்டார். தற்போது சீரியஸாக இருக்கிறது அவரது உடல் நிலை.
சுல்தான்பேட்டை கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (40). சாந்திக்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியமாம். கடந்த இரண்டு மாதங்களாக நாய்க்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளுக்கு இது பிடிக்கவில்லை. அதைக் கொண்டு போய் விட்டு விட்டு என்று கூறி வந்தார். ஆனால் சாந்தி கேட்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நாயைக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விட்டு வந்து விட்டார் பெருமாள். அவ்வளவுதான் ஆத்திரமடைந்தார் சாந்தி. வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரது குரலைக் கேட்டு கணவர் பெருமாள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.