Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்?


முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி.

இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே.

ஒரு மணி நேர சவால்:

கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வீச்சை எதிர்த்தும், அரை மணி நேரம் சுழற் பந்துவீச்சை எதிர்த்தும் பேட்டிங் செய்ய வேண்டும்.

பயிற்சி ஆடைகளில் வராமல், வீரர்கள் அனைவரையும் டெஸ்ட் போட்டிகளுக்கான வெள்ளை நிற ஆடையில் விளையாட கட்டளையிட்டு இருக்கிறார் கும்ப்ளே.முதல் அரை மணி நேரம் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் பந்துவீச்சையும், அடுத்த அரைமணி நேரம் அமித் மிஷ்ரா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் அவர்களால் முடிந்த அளவிற்கு விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும்.




அனில் கும்ப்ளேவின் கணக்கு என்னவென்றால், பயிற்சியில் ஒரு மணி நேரம்கூட தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், எப்படி ஒரு வீரரால் ஒரு நாள் முழுக்க களத்தில் இருந்து டெஸ்ட் போட்டி ஆட முடியும் என்பதே.

கோலியும் தப்பவில்லை:

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் இருமுறை அவுட் ஆனார். கீப்பரிடம் தன் விக்கெட்டை இருமுறை கொடுத்தார் ஷிகர் தவான். முரளி விஜயின் விக்கெட்டை இஷாந்த் ஷர்மா கைப்பற்றினார். ராகுலும், புஜாராவும் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார்கள்.

ஒரு மணி நேரத்தில், கோலி இருமுறை அவுட் ஆகிவிட்டார். இருமுறையும் அவரது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் ஜடேஜா.

கலக்கிய அஜிங்கிய ரஹானே:




இந்திய அணியில் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்து, தன் விக்கெட்டை இழக்காத ஒரே வீரர் அஜிங்கிய ரஹானே மட்டும் தான்.

ஜூலை 9-ம் தேதியில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.