Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

சிறையில் ராம்குமார் என்ன செய்கிறார்?


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பொறியாளர் சுவாதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தொடர்பான வழக்கில் பி.இ பட்டதாரியான ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது, ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைகு முயன்றதால் அவருக்கு நெல்லை, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று(செவ்வாய்)ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார் ராம்குமார்.

புழல் சிறையில் 'ஹாஸ்பிட்டல் பிளாக்' என்ற அழைக்கப்படும் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சிறைக் காவலர்களின் கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வருகிறார். இந்த பிளாக்கில் எட்டுக்கு பத்து அளவுள்ள அறை ராம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவறையுடன் கூடிய அந்த அறையில் ராம்குமார், அமைதியாகவே இருப்பதாகச்  சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 மேலும், ராம்குமார் குறித்து கூறிய சிறைத்துறை வட்டாரங்கள், "சிறைக்கு வந்த பிறகு மதியம் வரை ராம்குமாரைச் சந்திக்க யாரும் வரவில்லை. அவரின் உடல்நிலையைச் சிறை மருத்துவர்கள் காலையில் சோதித்தனர். அவரின்  கழுத்தில் உள்ள காயங்கள் குணமாகி வருகின்றன. அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல் இன்னும் பிரிக்கப்படவில்லை. காலையில் ராம்குமாரை பரிசோதித்த டாக்டர், அவரிடம் வலி எதுவும் உள்ளதா என்று கேட்டதற்கு வலி இல்லை என்று மட்டும் சொல்லியுள்ளார். ராம்குமார், எதையோ பறிக்கொடுத்தது போல அவர் சோகமாகவே காணப்படுகிறார்" என்றனர்.

ராம்குமார் குறித்து சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ராம்குமார், ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர் என்பதால் அவர் சிறைக்குள்ளேயும் அதுபோல ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காகவே அவரைக்  கண்காணித்து வருகிறோம். அவரின் உடல் நிலை சரியானதும் வேறு அறைக்கு மாற்றப்படுவார். சிறையில் நலமாக இருக்கிறார்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.