சில்வர்ஸ்டோன்: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் வாங்கிவிட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். இவரை இந்தியா கொண்டுவரவும், கடனை மீட்கவும் மத்திய அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்று நடந்த பார்முலா ஒன் கார் பந்தயம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், போர்ஸ் இந்தியா அணி உரிமையாளர் என்ற முறையில் மல்லையா பங்கேற்றார். அவர் கூறியதாவது: நான் பந்தயத்தை விரும்புபவன்; கார் பைத்தியம், இதனால்தான் இக்குழுவை வாங்கினேன். மொனாகோவிலும், பாகுவிலும் நடந்த போட்டியில் எனது குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இருந்தாலும், அதை நேரில் காணும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல வேண்டும். நான் பயணிக்கால் இங்கேயே தங்கியிருக்கிறேன், ஆனால் விரும்பிய நேரம் கிடைத்திருக்கிறது. வாரத்தில் 6 நாள் உடற்பயிற்சி செய்கிறேன். சில கிலோ கூட குறைந்து ‘ட்ரிம்’ ஆகி வருகிறேன். முன்பை விட மிக நன்றாகவே இருக்கிறேன். இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டது. அதற்காக இந்த உலகமே முடிந்து போனதாக அரத்தமில்லை. இங்கிலாந்தும் எனக்கு தாய்வீடு போன்றதுதான். 1992ம் ஆண்டு முதல் இங்கு தங்கியிருக்கிறேன். இங்கு நான் மிகவும் பிரபலம். ஏதோ வேற்று உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு எதுவும் எனக்கு ஏற்படவில்லை என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.